FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலகில் காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் சென்னை!

காற்று அதிகம் மாசடைந்த நகரங்களின் பட்டியலில் உலகளவில் சென்னை முதலிடத்தை எட்டியுள்ளது குறித்து...

காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியல் - படம் - Tamil Nadu Air Quality Index
பகிர்:

தீபாவளியையொட்டி காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் உலகளவில் சென்னை முதலிடத்தை எட்டியுள்ளது.

சர்வதேச அளவிலான காற்றின் தரக் குறியீட்டுப் பட்டியலில் 907 புள்ளிகளுடன் மிக மோசமான பிரிவில் சென்னை இடம்பெற்றுள்ளது.

காற்றின் தரம் 500 புள்ளிகளுக்குள் இருந்தால் கடுமையான பிரிவில் காற்று மோசமடைந்துள்ளது என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி மக்கள் காலை முதலே பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். சென்னையில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்து வந்ததால், பட்டாசு வெப்பது சற்று குறைந்திருந்தது.

எனினும் மாலை நேரத்தில் மழை இல்லாததால், அதிக எண்ணிக்கையிலான மக்கள் பட்டாசுகளை வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசுகளை வெடிப்பதால் உருவாகும் புகையால், காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது.

உலகளவிலான காற்றின் தரக் குறியீட்டு வரைபடத்தில் சென்னையில் காற்றின் தரக் குறியீடு கடுமையான பிரிவில் இடம்பெற்றுள்ளது.

இரவு 8 மணி நிலவரப்படி சென்னையில் காற்றின் தரக் குறியீடு 907 புள்ளிகளாக உள்ளது. இரவு 7 மணிக்கு காற்றின் தரம் 411 புள்ளிகளாக இருந்த நிலையில், ஒரு மணிநேரத்தில் மிக மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.

summary

diwali crackers resulted Chennai tops the list of cities with the most air pollution in the world

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.