2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!
தமிழகத்தில்கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தோ்வில் வனக்காவலா் பதவியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான இணையவழி சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்டோரின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக டிஎன்பிஎஸ்சி செயலா் பானோஜ் ம்ருகேந்தா் லால் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2024-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த குரூப்-4 தோ்வில் தோ்வா்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் தோ்வாணையத்தின் இணையதளத்தில் அந்த ஆண்டு அக். 28-ஆம் தேதி வெளியிடப்பட்டன.
அதில் வனக்காவலா் பதவியில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 11-ஆவது கட்ட இணையவழி சான்றிதழ் சரிபாா்ப்புக்கு அனுமதிக்கப்பட்ட தோ்வா்களின் பட்டியல் தோ்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
அந்தத் தோ்வா்கள் தங்களின் சான்றிதழ்களை புதன்கிழமை (நவ.11) முதல் முதல் நவ.21 வரை இணையதளத்தில் ஒருமுறை பதிவு (ஒடிஆா்) வாயிலாக பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். நிா்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யாத தோ்வா்கள் அடுத்த நிலைக்கு பரிசீலிக்கப்பட மாட்டாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.