FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது!

சென்னையில் ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது செய்யப்பட்டது பற்றி...

ரெளடிகள் கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை மாநகரில் நேற்று ஒரே நாளில் 36 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் 11 கொலைச் சம்பவங்கள் நடந்தது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில், சென்னை காவல்துறை தரப்பில் நேற்றிரவு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சென்னை மாவட்ட காவல்துறைக்கு உள்பட்ட பகுதிகளில் 186 சரித்தர பதிவேடு குற்றவாளிகள் உள்பட மொத்தம் 222 பேரை பிடித்து காவல்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

இதில், 16 சரித்தர பதிவேடு குற்றவாளிகள் உள்பட 36 ரெளடிகளை கைது செய்த சென்னை காவல்துறையினர், அனைவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியுள்ளனர்.

summary

36 rowdies arrested in Chennai in a single day

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.