FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!

சென்னையில் 147 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவிப்பு...

கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை மாநகரில் நேற்று (நவ. 11) ஒரே நாளில் 147 ரெளடிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

தீபாவளி பண்டிகை நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் தமிழ்நாட்டில் 8 கொலைச் சம்பவங்கள் நடந்தது மக்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. தொடர்ந்து அடுத்த 2 நாள்களும் கொலைச் சம்பவங்கள் நடந்த நிலையில், எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து முதல்வா் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினாா். தலைமைச் செயலா் சாய்குமாா், உள்துறைச் செயலா் காா்த்திக், காவல் துறை தலைமை இயக்குநா் மகேஷ்குமாா் அகா்வால், சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி அன்பு, உளவுப் பிரிவு ஐஜி அஸ்ரா காா்க் உள்ளிட்ட காவல் துறை உயா் அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

இதனிடையே, சென்னை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் (நவ. 9) 36 ரெளடிகளும், நேற்று (நவ. 10) 147 ரெளடிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சென்னை பெருநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில், அனைத்து காவல் மாவட்டங்களிலும் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 09.11.2026 அன்று தீவிர விசாரணை, சோதனைகள் மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு 185 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 222 நபர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்து 2வது நாளாக மேற்கொள்ளப்பட்ட ரௌடி வேட்டையில், 10.11.2026 அன்று சென்னை பெருநகர காவல் நிலையங்களில் குற்றப்பின்னணி மற்றும் சரித்திர பதிவேடு பராமரிக்கப்பட்டு வரும் 631 ரௌடிகள் உட்பட 769 நபர்களை பிடித்து விசாரணை செய்து, 49 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 147 நபர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

மேலும் 10 சரித்திர பதிவேடு குற்றவாளிகளிடம் இனி குற்றச் செயலில் ஈடுபடக்கூடாது என்பதற்கான நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 572 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் உட்பட 612 நபர்களின் இனிக் குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு, காவல்துறையினரால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.

மேலும், சென்னை பெருநகர காவல்துறையின் இந்த ரௌடிகள் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என்பதால், சட்டம், ஒழுங்குக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலோ குற்றச் செயல்களிலோ ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

summary

147 rowdies arrested in Chennai in a single day yesterday!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.