FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

புதிய புயல் சின்னம்: தமிழக வட மாவட்டங்களை நோக்கி நகர அதிக வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவாகவுள்ள புதிய புயல் சின்னம் குறித்து...

53 வினாடிகள் முன்பு
புயல் சின்னம் (கோப்புப்படம்) - கோப்புப்படம்
பகிர்:

வங்கக் கடலில் உருவாகவுள்ள புதிய புயல் சின்னம், தமிழக வட மாவட்டங்களை நோக்கி நகர, அதிக வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வரும் 13 ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். இது வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இது தொடர்பாக டெல்டா வெதர்மேன் என்று அறியப்படும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்திருப்பதாவது:

”உருவாகவிருக்கும் புயல் சின்னம் தமிழகத்தை மையமாகக் கொண்டு நகரும் அமைப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவான பிறகு - இது அடுத்த 24 முதல் 48 மணி நேரத்திற்குள் உருவாகும் வாயப்பு உள்ளது.

தற்போதைய வானிலை அமைப்புகளை வைத்து வெளியாகும் கணிப்புகள், புயல் சின்னம் வட தமிழகக் கடற்கரைப் பகுதியை நோக்கி வலுப்பெற்று நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் காரணமாக, நவ. 15 ஆம் தேதி முதல் வட தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தீவிரமடையும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கையானது ஏற்கனவே அறிவித்தபடி, நவ. 13 ஆம் தேதி இரவுக்குள் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும்.

நவ. 14 ஆம் தேதி முதல் ஆழ்கடலுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி முழுமையாக உருவாகி நிலைபெற்ற பிறகு அடுத்த விரிவான வானிலை நிலவரம் குறித்து வெளியிடப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Private meteorologist Hemachandran has stated that a new cyclone, set to form in the Bay of Bengal, is highly likely to move towards the northern districts of Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.