FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கலெக்டருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி: சென்னையில் மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏவுக்கு எதிராக சென்னையில் மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்...

சென்னையில் மாதர் சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம் - X
பகிர்:

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய குற்றச்சாட்டில் சிக்கிய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை கோரி, சென்னை பனகல் மாளிகை அருகே அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தகவல்கள் வெளியாகி அது சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் புகார் அளித்ததாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

எனினும் தவெக எம்எல்ஏவுக்கு எதிராக அரசியல் தலைவர்களும் சமூக ஊடகங்களில் நெட்டிசன்களும் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது உரிய நடவடிக்கை கோரி, அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை பனகல் மாளிகை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாதர் சங்கத்தைச் சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.

'குற்றவாளியை பாதுகாப்பது ஆட்சிக்கு அழகில்லை.. பெண்களையும் குழந்தைகளையும் ஏமாற்றாதே.! பாலியல் குற்றவாளிகளை எக்காரணத்தைக் கொண்டும் பாதுகாக்காதே' என கைகளில் பதாகையை ஏந்தி அவர்கள் முழக்கமிட்டனர்.

summary

Obscene text message sent to District Collector: Women association holds protest in Chennai

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.