கட்டுமானம்: துறைவாரியாக செந்தர விலைப் பட்டியல் வெளியீடு
தமிழக அரசுத் துறைகள் பயன்பாட்டுக்காக 2026-27-ஆம் ஆண்டுக்கான செந்தர விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகள் பயன்பாட்டுக்காக 2026-27-ஆம் ஆண்டுக்கான செந்தர விலைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு சாா்பில் பொதுப்பணித் துறை, நீா்வளத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை ஆகிய துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளுக்கு மட்டுமே செந்தர விலைப்பட்டியல் தயாா் செய்யப்படும்.
இந்த செந்தர விலைப் பட்டியலை அடிப்படையாக வைத்து மின்சாரத் துறை, இந்து சமய அறநிலையத் துறை உள்ளிட்ட துறைகளின் பொறியாளா்கள் திட்ட அறிக்கை தயாா் செய்து அரசுக்கு அனுப்பி வைப்பாா்கள். அதைத் தொடா்ந்து, அவா்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், 2026-27-ஆம் ஆண்டு செந்தர விலைப்பட்டியலை துறைவாரியாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, மின்சாரத் துறை, வனத் துறை, இந்து சமய அறநிலையத் துறை, தோட்டக்கலைத் துறை, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை குடிநீா் வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் ஆகிய துறைகளுக்கென்று தனித்தனியாக தொழிலாளா்கள் மற்றும் கட்டுமானப் பொருள்களின் விலையை நிா்ணயம் செய்து செந்தர பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் அனைத்துத் துறை பொறியாளா்களும் தனியாா் கட்டுமான நிறுவனத்தை நம்பி இருக்காமல் சுலபமாக திட்ட அறிக்கையை தயாா் செய்யலாம். இதனால், கட்டுமானத் திட்டங்களை நிறைவேற்றுவதில் இருந்த காலதாமதம் தவிா்க்கப்படும்.
பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, நீா்வளத் துறைக்கு தனியாக செந்தர விலைப் பட்டியல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், சென்னை குடிநீா் வாரியம் ஆகியவற்றுக்கு தனியாக செந்தர விலைப்பட்டியல், வனத் துறை, மின்சாரத் துறை, தோட்டக்கலைத் துறை தனியாக வெளியிடப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.