FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உ.பி. தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ்! சமாஜவாதியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு!

உ.பி. தேர்தலுக்குத் தயாராகும் காங்கிரஸ்... தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜவாதியுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைப்பு...

மல்லிகார்ஜுன கார்கே - ANI
பகிர்:

உத்தரப் பிரதேச பேரவைத் தேர்தலில் தொகுதிப் பங்கீடு குறித்து சமாஜவாதியுடன் பேச்சுவார்த்தை நடத்த பிரியங்கா காந்தி உள்பட 5 பேர் கொண்ட குழுவை அமைத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு 2027ல் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தேர்தல் வியூகம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை செய்ய பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் அடங்கிய 5 பேர் குழுவை கார்கே அமைத்து உத்தரவிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கும் என்றும் ஒரு வலுவான கூட்டணியாக உருவெடுக்கும் என்றும் கார்கே கூறியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் 181 தொகுதிகளைக் கேட்பதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

Kharge says Congress-INDIA bloc to offer strong

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.