FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பெரியார் அறிவுலக ஊழல்: தமிழகத்தில் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை!

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக 2 -வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை....

57 வினாடிகள் முன்பு
பெரியார் அறிவுலகம் - கோப்புப் படம்
பகிர்:

கோவை பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதல் முறைகேடு தொடர்பாக 2 -வது முறையாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட பெரியார் அறிவுலக நூலகத்திற்காக நூல்கள் கொள்முதல் செய்யப்பட்டதில், தகுதியற்ற போலி புத்தகங்கள், ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நூல்கள், போலி நூலாசிரியர்கள் மற்றும் போலியான பதிப்பகங்கள் வாயிலாகப் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் புகார்கள் எழுந்தன.

Advertisement

Advertisement

புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை பெரியார் அறிவுலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று இரண்டாவது முறையாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் 7 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள அகல்விளக்கு பதிப்பகத்தின் உரிமையாளர் மோகன் வீடு, திருவாரூரில் உள்ள அவரது அலுவலகம், கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், நூலகம், காஞ்சிபுரம், தென்காசி, மயிலாடுதுறை ஆகிய இடங்களில் உள்ள அரசு நூலகங்கள் உள்பட 7 இடங்களில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.

சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, கொள்முதல் குழுவில் இடம்பெற்றிருந்த முக்கிய நபர்களுக்கு நேரில் ஆஜராக காவல் துறை சம்மன் அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

periyar arivulagam books procurement row: DVAC raids 7 places in tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.