தவெக கல்வி விருது விழா! ராகுலுக்கு முதல்வர் விஜய் அழைப்பு!
தவெக கல்வி விருது விழாவுக்கு ராகுலுக்கு அழைப்பு விடுத்திருப்பது பற்றி...
தமிழக வெற்றிக் கழகத்தின் கல்வி விருது வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு முதல்வர் ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2023 ஆம் ஆண்டு முதல் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக 10, 12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு தவெக சார்பில் ஊக்கத்தொகையுடன் கல்வி விருதும் வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
Advertisement
இந்தாண்டில், 10, 12 ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு விருது வழங்கும் முதல்கட்ட நிகழ்ச்சி கடந்த நவ. 4 ஆம் தேதி நடைபெற்றது.
இதில் முதல்வர் விஜய் பங்கேற்று ஊக்கத்தொகை மற்றும் விருது வழங்கி மாணவர்களை கெளரவித்தார். முதல்கட்ட விழாவில் 30 தொகுதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
மொத்தம் 8 கட்டங்களாக நடைபெறும் கல்வி விருது வழங்கும் விழாவின் 2-ம் கட்டம் நாளையும் (நவ. 18), மூன்றாம் கட்டம் நவ. 27-ஆம் தேதியும் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தில்லியில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் விஜய் கலந்துகொண்டார்.
அப்போது, கல்வி விருது வழங்கும் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தியை முதல்வர் விஜய் அழைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதனிடையே, நாளை நடைபெறவிருந்த இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மாற்று தேதியில் நடைபெறவுள்ள கல்வி விருது விழாவில் சிறப்பு விருந்தினராக ராகுல் காந்தி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.