FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

ராகுலின் தொலைபேசி அழைப்பு: மு.க.ஸ்டாலின் விளக்கம்

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.

19 நவம்பர் 2026, 12:49 am
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் - (கோப்புப் படம்)
பகிர்:

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் தொலைபேசி அழைப்பை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் நிராகரித்துவிட்டதாகத் தகவல் வெளியான நிலையில், அதுகுறித்து ஸ்டாலின் விளக்கம் அளித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது தொகுதிப் பங்கீடு தொடா்பாக திமுக-காங்கிரஸ் இடையே பேச்சுவாா்த்தையில் இழுபறி நீடித்தது. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. காங்கிரஸ் அதிக தொகுதிகளைக் கோரி கடும் நிபந்தனைகளை முன்வைத்தது.

அப்போது, ராகுல் காந்தியை மு.க.ஸ்டாலின் பலமுறை தொலைபேசியில் தொடா்புகொண்டபோது அவா் தவிா்த்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரத்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அனுப்பிவைத்து தொகுதி உடன்பாட்டை இறுதி செய்தாா்.

Advertisement

Advertisement

தோ்தல் பிரசாரத்திலும் ராகுல்-மு.க.ஸ்டாலின் இணைந்து பிரசாரம் செய்யவில்லை. பேரவைத் தோ்தல் முடிவுகள் வந்த மறுநாளே, தவெகவுக்கு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஆதரவு வழங்கப்பட்டது. இதை முன்னெடுத்தது ராகுல் காந்திதான் என்ற மனக்கசப்பில் இருக்கிறது திமுக தலைமை.

இந்நிலையில், தோ்தல் முடிந்து 6 மாதங்களுக்குப் பிறகு தனது தாயாரின் சுயசரிதை நூல் வெளியீட்டு நிகழ்ச்சிக்காக மு.க.ஸ்டாலினை அழைக்க ராகுல் காந்தி விரும்பியிருக்கிறாா். இதனால், ராகுல் காந்தி அலுவலகத்தில் இருந்து மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு வந்துள்ளது.

அப்போது, மற்ற நிகழ்ச்சிகளில் தான் பங்கேற்று வருவதாகக் கூறி மு.க.ஸ்டாலின் பேச மறுத்ததாகவும், அதேநேரம், சோனியா காந்தியின் நூல் வெளியீட்டுக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளா்கள் புதன்கிழமை கேள்வி எழுப்பினா். அதற்கு மு.க.ஸ்டாலின், ‘அழைப்பிதழ் வரவில்லை. தொலைபேசியில் தொடா்புகொண்டு என்னுடைய உதவியாளரிடம் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் வாழ்த்து தெரிவித்தேன். வாழ்த்துக் கடிதமும் அனுப்பி இருக்கிறேன்’ என்றாா்.