முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-இல் முதலீட்டாளர்கள் மாநாடு!
முதல்வர் விஜய் தலைமையில் 2-ஆவது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறுவது குறித்து...
முதல்வர் விஜய் தலைமையில் நவ. 25-ல் 2-ஆவது முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு பொறுப்பேற்ற இரண்டாவது வெற்றி தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு, வருகிற நவ. 25 ஆம் தேதியில் சென்னையில் நடைபெறவுள்ளது. முதல்வர் விஜய்யின் தலைமையில் இந்த மாநாடு நடைபெறவிருக்கிறது.
முன்னதாக, ஆக. 13 ஆம் தேதியில் நடைபெற்ற முதல் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 67,452 கோடி மதிப்பிலான 97 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. மேலும், முதல் மாநாட்டின் மூலம் மாநிலத்தில் சுமார் 1,06,998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Advertisement
Advertisement
summary