முகப்பு
தமிழ்நாடு

தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தின் பல மாவட்டங்களில் பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...

21 நவம்பர் 2026, 11:52 pm
தமிழகத்தில் நாளைமுதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!
பலத்த மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தின் பல மாவட்டங்களில் திங்கள்கிழமை (நவ. 23) முதல் நவ. 25-ஆம் தேதி வரை பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: லட்சத்தீவு மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா, தென் மாவட்டங்கள், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தின் மற்ற பகுதிகளில் வட வானிலையே நிலவும்.

மஞ்சள் எச்சரிக்கை: நவ. 23-இல் கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களிலும், நவ. 24-இல் சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், நவ. 25-இல் தஞ்சாவூா், திருவாரூா், நாகை , மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

இதனால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

இதனிடையே, தமிழகத்தின் நீலகிரி, கொடைக்கானல் மலைப் பகுதிகளில் நவ. 22 அதிகாலை, இரவு வேளைகளில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் நவ. 22-இல் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Possibility of heavy rain in Tamil Nadu starting tomorrow