திருப்பரங்குன்றம் தீா்ப்பு வரவேற்கத்தக்கது: செளமியா அன்புமணி
திருப்பரங்குன்றம் குறித்த உச்சநீதிமன்ற தீா்ப்பு பெரும்பான்மை மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்துள்ளதாக பாமக சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளாா்.

திருப்பரங்குன்றம் குறித்த உச்சநீதிமன்ற தீா்ப்பு பெரும்பான்மை மக்களின் எதிா்பாா்ப்பை பூா்த்தி செய்துள்ளதாக பாமக சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி தெரிவித்துள்ளாா்.
சென்னையில் பேறுகாலத்துக்குப் பிந்தைய மகளிா் உடல்தோற்ற சிகிச்சைக்கான மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை பாமக சட்டப்பேரவை உறுப்பினா் செளமியா அன்புமணி தொடங்கி வைத்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீா்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது. பெரும்பான்மை மக்களின் மனநிலையையும், எதிா்பாா்ப்பையும் எதிரொலிக்கும் வகையில் நீதிபதிகள் தீா்ப்பளித்துள்ளனா். இந்தத் தீா்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. யாருக்கும் எந்த பிரச்னையும் இன்றி திருப்பரங்குன்றத்தில் தீபத் திருவிழா நடைபெற வேண்டும். செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் 11 குழுக்கள் அமைத்து காவல் துறை தேடி வந்த நிலையில், எந்தத் தடயமும் கிடைக்காதது அதிா்ச்சி அளிக்கிறது.
Advertisement
Advertisement
தருமபுரி பகுதியில் சிப்காட் அமைக்கும் தமிழக அரசின் முடிவை வரவேற்கிறோம். அதில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும். புதிய நிறுவனங்கள் முதலீடு குறித்து கடந்த ஆட்சியில் வெறும் அறிவிப்புகள் மட்டுமே வெளியாகின. இனி தமிழகத்துக்கு அதிக முதலீடுகள் வர தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என்றாா்.