வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆய்வு!
வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீரென ஆய்வு குறித்து...

வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
உலகப் பிரசித்தி பெற்ற ஸ்தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அண்ணாமலையாா் திருக்கோவிலில் செவ்வாய்கிழமை 24 ஆம் தேதி அதிகாலை அண்ணாமலையாா் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடா்ந்து அன்று மாலை கோவில் பின்புறம் அமைந்துள்ள 2668 அடி உயரம் கொண்ட தீப மலையின் மீது மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.
மகா தீபம் காண ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிக பக்தர்கள் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு செல்வார்கள் என்பதை கருத்தில் கொண்டு பேருந்துகள் முறையாக இயக்க தயார் நிலையில் உள்ளனவா என்பது குறித்து அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டார்.
Advertisement
Advertisement
வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 100 சிறப்பு பேருந்துகளும், திருப்பத்தூரில் இருந்து 40 பேருந்துகளும், ஆற்காடில் இருந்து 30 பேருந்துகளும் மற்றும் ஆந்திரா மாநிலத்தில் இருந்து அதிகயளவில் பக்தர்கள் வருவதால் திருப்பதியில் இருந்து சித்தூர் வேலூர் வழியாக திருவண்ணாமலைக்கு 11 சிறப்பு பேருந்துகளும், பெங்களூருவில் இருந்து 15 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள நிலையில் இதுகுறித்து அமைச்சர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.