திருப்பரங்குன்றம் விவகாரம்: டிஜிபியுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!
சென்னை தலைமைச் செயலகத்தில் டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுடன் முதல்வர் விஜய் ஆலோசனை....

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்யுடன் டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கார்த்திகை தீபத் திருவிழா நாளை (நவ. 24) நடைபெற உள்ள நிலையில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலை மேல் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
முன்னதாக திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உச்சி பிள்ளையார் கோயிலில் தீபம் ஏற்றப்பட்டு வந்த நிலையில், அங்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, மலைக்கு இடையே உள்ள நில அளவைக் கல் (சா்வே தூண்) மீது தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண், நெல்லித்தோப்பு, மலைக்குச் செல்லும் படிக்கட்டு பாதை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து, திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக முதல்வர் விஜய்யுடன் அரசு தலைமை வழக்கறிஞர் இன்று காலை ஆலோசனை மேற்கொண்ட நிலையில் தற்போது டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.