ராஜ்மோகன் மீது நடவடிக்கை கோரி ஆளுநர், தலைமைச் செயலருக்கு திமுக கடிதம்!
அமைச்சர் ராஜ்மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் திமுக சார்பில் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது பற்றி...

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத் தலைவர் பொறுப்பிற்கு ஒருவர் ரூ. 5 கோடி தன்னிடம் கொடுக்க முன்வந்ததாகக் கூறிய அமைச்சர் ராஜ்மோகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநரிடம் திமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் கடந்த நவ. 1 அன்று தமிழ்நாடு நாளை முன்னிட்டு, எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்ற அரசு விழாவில் தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்ற தலைவர் பொறுப்பிற்கு ரூ. 5 கோடி ஒருவர் கொடுக்க முன்வந்ததாகக் கூறினார்.
தமிழ்நாடு பாடநூல் நிறுவனத் தலைவர் லயோலா மணி தன்னிடம் அழைத்து வந்ததாகவும் பேசியிருந்தார்.
Advertisement
Advertisement
இதனைத் தொடர்ந்து திமுக சார்பில் சட்டத்துறை இணைச் செயலாளரும், எழும்பூர் சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பரந்தாமன் நவ. 2 அன்று லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநருக்கு புகார் மனு அளித்திருந்தார்.
அதன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஏதுவாக லஞ்ச ஒழிப்பு சட்டம் 1988 -ன்படி வழக்குத் தொடர அனுமதி வேண்டி இன்று (நவ. 23) பரந்தாமன், தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.