தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் சம்பவத்தை மறைத்த அமைச்சர்கள் மீதும் வழக்கு! இன்பதுரை எம்.பி.
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் சம்பவத்தை மறைத்த அமைச்சர்கள் மீதும் வழக்கு தொடர நடவடிக்கை என்று இன்பதுரை எம்.பி. தெரிவித்துள்ளது பற்றி...

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில் சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவந்த தவெக அமைச்சர்கள் மீது தனியாக வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிமுக வழக்குரைஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான இன்பதுரை கூறினார்.
தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. மீது, வழக்குப்பதிவு செய்யக் கோரிய மனு மீதான விசாரணை நவ. 27க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் இன்பதுரை செய்தியாளர்களைச் சந்தித்தபோது கூறியதாவது,
Advertisement
Advertisement
தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்தில், தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் இன்பதுரை செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
இந்த வழக்கு ஒரு பெண் தொடர்புடைய விவகாரம் என்பதால், இதுகுறித்து விரிவாகப் பேச முடியாது. இருப்பினும், பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைக்கச் செய்ததில் பெருமை கொள்கிறேன்.
நேற்று வரை புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்த காவல்துறையினர், இன்று எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவந்த தவெக அமைச்சர்களான நிர்மல், புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன் ஆகியோர், குற்றம் சாட்டப்பட்டவருக்குத் துணையாகச் செயல்பட்டுள்ளனர். அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வழக்குரைஞர்கள் மூலமாக இந்த விவகாரத்தை நாங்கள் நீதிமன்றத்துக்குக் கொண்டு வந்தோம். வழக்குப்பதிவு செய்யாமல் இருக்க சம்பந்தப்பட்டவர்களை மிரட்டியது யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் முதல்வர் அமைதியாக இருந்துள்ளார். எனவே, முதல்வரும் இதில் குற்றவாளி என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன்.
ஒரு மாவட்டத்தின் ஆட்சியர்தான் உள்ளகப் புகார் குழுவின் (POSH Committee) தலைவர் என்பதால் அந்தக் குழுவிடம் புகார் அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவந்த தவெக அமைச்சர்கள் மீது தனியாக வழக்குத் தொடரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வழக்குரைஞர் இன்பதுரை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.