திருப்பரங்குன்றம்: நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது - விசிக
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளது குறித்து...

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்பட முடியாது என விசிக தலைவர் திருமாவளவன் செவ்வாய்க்கிழமை (நவ. 24) தெரிவித்துள்ளார்.
மலை உச்சியிலுள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும் எனப் பொதுமக்களும், பக்தர்களும், இந்து அமைப்பினரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர்.
இருப்பினும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை இரவு வரை மாவட்ட ஆட்சியரோ, மாநகர காவல் ஆணையரோ திருப்பரங்குன்றம் மலைப்பகுதிக்கு நேரில் வந்து எவ்வித ஆய்வும் மேற்கொள்ளவில்லை. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி தீபம் ஏற்றுவதற்கான குழுவும் இதுவரை முறையாக அறிவிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
மேலும், வழக்கமான இடத்திலேயே மகா தீபம் ஏற்றுவதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து திருமாவளவன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:
உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டியது மாவட்ட ஆட்சியரின் கடமைதான். ஆனால், நீதிபகளைப்போல மாவட்ட ஆட்சியர்கள் செயல்படமுடியாது. நீதிபதிகள் ஆவணங்களையும் ஆதாரங்களையும் சான்றுகளையும் சாட்சியங்களையும் அடிப்படையாகக் கொண்டு முடிவெடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர்.
ஆனால், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் அவ்வாறு செயல்பட இயலாது. மாநில அரசின் நிலைப்பாட்டினையும் கருத்தில் கொண்டே செயல்பட வேண்டியிருக்கும். உயர் அதிகாரிகளுக்கு ஆணையிடும் அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு.
எனவே, மாநில அரசு நீதித்துறை பயங்கரவாதத்துக்கு அஞ்சாமல் துணிந்து இதனை எதிர்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் எதிர்காலத்தையும் தமிழ்நாட்டு மக்களின் நலன்களையும் கருத்தில் கொண்டு திருப்பரங்குன்றத்தில் நீதியை நிலைநாட்ட உறுதிகுலையாமல் செயல்பட வேண்டும் என்று திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.