அன்பில் மகேஸுக்கு 2 நாள் போலீஸ் காவல்! சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி
திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி...

திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தனியாா் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் அனுமதிகள் பெற்றுத் தருவதாக்க கூறி, ரூ. 400 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சா் அன்பில் மகேஸ், பி.டி. அரசகுமாா், முன்னாள் எம்எல்ஏ முத்துகுமாா், காா் ஓட்டுநா் சரவணன் உள்ளிட்டோா் மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள அன்பில் மகேஸ் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். பிணை கோரி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது.
Advertisement
Advertisement
இதனிடையே மீண்டும் அன்பில் மகேஸ் உள்ளிட்ட மூவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் அனுமதி கோரியுள்ளது.
இந்த வழக்கு இன்று சென்னை ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சத்யமூர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்த நிலையில் 2 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விசாரிக்கவும் விசார்ணையின்போது அவரை உடலளவிலோ மனதளவிலோ துன்புறுத்தக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஏற்கெனவே அன்பில் மகேஸின் நீதிமன்றக் காவல் டிச. 2-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.