முகப்பு

65,786 பேருக்கு வேலை! முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள்.

65,786 பேருக்கு வேலை! முதலீட்டாளர்கள் மாநாட்டில் 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
சென்னையில் நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாடு. - படம்: தமிழ்நாடு அரசு.
பகிர்:

சென்னையில் முதல்வர் சி. ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று (நவ. 25) நடைபெற்ற வெற்றி தமிழ்நாடு முதலீடு மற்றும் செயலாக்க மாநாட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் ரூ. 58,214 கோடி முதலீடு மற்றும் 65,786 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில்
78 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.  

மேலும், ரூ. 7,925 கோடி முதலீடு மற்றும் 19,965 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 15 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, ரூ. 1,430 கோடி முதலீடு மற்றும்
1,710 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 6 திட்டங்களைத் தொடங்கி வைத்தார்.

Advertisement

Advertisement

5 நிறுவனங்களில் பல்வேறு பணியிடங்களுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 18 நபர்களுக்குப் பணிநியமன ஆணைகளையும் வழங்கினார்.

பின்தங்கிய மாவட்டங்களில் முதலீடு

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், தொழில் வளர்ச்சியைத் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் விரிவுபடுத்தும் வகையில்
25 மாவட்டங்களில் மேற்கொள்ளப்படவுள்ளன. 

சிவகங்கை, தருமபுரி, விருதுநகர், கடலூர், விழுப்புரம்,  ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் தேனி ஆகிய தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய மாவட்டங்களிலும் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த மாவட்டங்களில்
ரூ.17,413 கோடி முதலீடுகள் மற்றும் 16,411 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் 18 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மொத்தம் கையெழுத்திடப்பட்டுள்ள 78 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில், 58 ஒப்பந்தங்கள் புதிய தொழில் திட்டங்களை (Greenfield Projects) நிறுவுவதற்கானவை. இவை மொத்த முதலீட்டு மதிப்பில் 64 சதவீதத்தைக் கொண்டுள்ளன. மேலும், 18 ஒப்பந்தங்கள் ஏற்கனவே உள்ள தொழிற்சாலைகளின் விரிவாக்கத்திற்கானவை (Brownfield Projects) என்பதுடன், 2 ஒப்பந்தங்கள் புதிய முதலீடு மற்றும் விரிவாக்கம் ஆகிய இரண்டையும் உள்ளடக்கிய கலப்புத் திட்டங்களாகும்.

பிரேசில், பின்லாந்து, ஜெர்மனி, சிங்கப்பூர், தென் கொரியா, ஸ்வீடன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் தலைமையகம் கொண்ட 14 நிறுவனங்கள் ரூ. 14,798 கோடி அளவிற்கான அந்நிய நேரடி முதலீடுகள் மேற்கொண்டுள்ளன.  இது தமிழ்நாட்டின் மீது சர்வதேச முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கையையும், உலகளாவிய முதலீட்டு மையமாகத் தமிழ்நாடு உருவெடுத்து வருவதையும் எடுத்துக்காட்டுகிறது.  

மேலும், இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாகன உற்பத்தி மற்றும் வாகன உதிரிபாகங்கள், மின்னணுவியல் மற்றும் குறைக்கடத்திகள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, கனரக மற்றும் துல்லியப் பொறியியல், ஜவுளி, தொழிற்பூங்காக்கள் மற்றும் தளவாடங்கள், தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கப்பல் கட்டுமானம், ரசாயனத் தொழில்கள், உணவுப் பதப்படுத்துதல், விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உலகளாவியத் திறன் மையங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படவுள்ளன.

summary

Agreements entered into at the 'Vetri Tamil Nadu' (Successful Tamil Nadu) Investment and Implementation Conference held in Chennai.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.