முதல்வர் விஜய்யின் 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள்: அமைச்சர் கீர்த்தனா
தவெகவின் 6 மாத ஆட்சியில் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டது குறித்து...
தவெகவின் 6 மாதகால ஆட்சியில் ரூ. 1.14 லட்சம் கோடி மதிப்பிலான 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தொழிற்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் கீர்த்தனா வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது, தவெக ஆட்சி அமைந்த மே மாதம் முதல் 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டு, ரூ. 1.14 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 1,32,771 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
Advertisement
Advertisement
இந்த 112 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 83 ஒப்பந்தங்கள் திட்டங்களாக மாற்றப்பட்டு அடுத்தகட்ட செயல்பாடுக்கு வந்துள்ளதால் ரூ. 59,485 கோடி முதலீடு உறுதியாகியுள்ளது.
ஜவுளி, ஆட்டோமொபைல், உற்பத்தித் துறை, எலக்ட்ரானிக்ஸ், மருந்துகள், விண்வெளி மற்றும் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, சுகாதாரம் உள்பட பல துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்குரிய இடமாக தமிழ்நாடு மாறி வருகிறது.
முதல்வர் விஜய் தலைமையிலான ஆட்சியின்கீழ், தமிழ்நாட்டின் தொழிற்துறை வளர்ச்சிப் பயணம் வேகமடைந்து வருகிறது என்று கூறியுள்ளார்.