முகப்பு

குற்றத்தை மறைத்ததற்காக தலைமைச் செயலர், அமைச்சரை விசாரிக்க வேண்டும்: உதயநிதி

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரம் தொடர்பாக...

5 வினாடிகள் முன்பு
குற்றத்தை மறைத்ததற்காக தலைமைச் செயலர், அமைச்சரை விசாரிக்க வேண்டும்: உதயநிதி
உதயநிதி ஸ்டாலின் - படம்: எக்ஸ்
பகிர்:

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் விவகாரத்தில், குற்றத்தை மறைத்த குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் மற்றும் சட்டத் துறை அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பிய ஆளுங்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டுமென தமிழ்நாடு காவல்துறை டிஜிபியிடம் திமுக சார்பில் இன்று புகார் மனு அளித்தோம்.

Advertisement

Advertisement

பாதிக்கப்பட்ட அதிகாரி ஜூலை மாதமே தலைமைச் செயலாளரிடம் புகாரளித்தும், அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சட்ட அமைச்சர் நிர்மல்குமார் பொய் பேசி பேட்டி கொடுத்தார்.

இந்த சம்பவத்தில், புகாரளித்து 116 நாள்கள் ஆகியும், உயர் நீதிமன்றம் சொன்ன பிறகே இந்த முதல்வரின் அரசு வழக்குப்பதிவு செய்துள்ளது.

மற்றவர்களைப் பாய்ந்து பாய்ந்து கைது செய்யும் காவல் துறை, அருள் விக்னேஷை கைது செய்யவில்லை. அவரை கைது செய்ய வேண்டும்.

குற்றத்தை மறைத்த குற்றத்திற்காக தலைமைச் செயலாளர் - சட்ட அமைச்சர் ஆகியோரையும் விசாரிக்க வேண்டும் - சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிஜிபியிடம் புகாரளித்தோம்.

இதேபோல, கோரிக்கை அளிக்க வந்த ஒருவரை துணை பேரவைத் தலைவர் ரவிசங்கர் கடுமையாக தாக்கி இருக்கிறார்.

இதில் தாக்குதலுக்கு ஆளான நபர் காவல் நிலையத்தில் புகாரளித்தும் இதுவரை வழக்குப்பதிவு செய்யவில்லை.

ஆகவே துணை துணை பேரவைத் தலைவர் மேல், உடனே வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தோம்.

ஆளுங்கட்சிக்காரர்களின் அட்டூழியத்தை முதல்வரின் கட்டுப்பாட்டில் உள்ள காவல் துறையும் இனியும் வேடிக்கை பார்க்கக் கூடாது என்ற தமிழ்நாட்டு மக்களின் குரலை ஊடக நண்பர்களிடம் எடுத்துரைத்தோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Regarding the case of Kallakurichi MLA Arul Vignesh, Leader of the Opposition Udhayanidhi has urged that the Chief Secretary and the Law Minister also be investigated for the offense of concealing the crime.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.