சென்னை உரத் தொழிற்சாலை உள்பட 6 ஆலை விரிவாக்கத் திட்டங்கள்: மத்திய அரசு ஒப்புதல்
கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய முதலீட்டுக் கொள்கையின் கீழ், சென்னை உரத் தொழிற்சாலை உள்பட 6 ஆலை விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் ஒப்புதல் அளிக்கப்பட்ட புதிய முதலீட்டுக் கொள்கையின் கீழ், சென்னை உரத் தொழிற்சாலை உள்பட 6 ஆலை விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய உரத் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: கடந்த ஜூலையில் 2026-ஆம் ஆண்டுக்கான தேசிய யூரியா முதலீட்டுக் கொள்கை அறிவிக்கப்பட்டது. புதிய ஆலைகளை அமைக்கவும், ஏற்கெனவே உள்ள ஆலைகளை விரிவுபடுத்தவும் முதலீடுகளை ஈா்ப்பதே இந்தக் கொள்கையின் நோக்கம்.
இந்தக் கொள்கையின் கீழ் 18 திட்ட முன்மொழிவுகள் பெறப்பட்டன. அவற்றில் எரிவாயு மூலம் யூரியா தயாரிக்கும் 6 முக்கிய யூரியா ஆலை விரிவாக்கத் திட்டங்கள், அடுத்தகட்ட நடவடிக்கைக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
இதன்படி, ரூ.54,000 கோடி மதிப்பில் சென்னை மணலியில் உள்ள சென்னை உரத் தொழிற்சாலை, பஞ்சாப் மாநிலம் நங்கல் பகுதியில் உள்ள தேசிய உரத் தொழிற்சாலை, உத்தர பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூா் பகுதியில் உள்ள கிரிப்கோ உரத் தொழிற்சாலை, மேற்கு வங்க மாநிலம் பானாகரில் உள்ள மேடிக்ஸ் உரத் தொழிற்சாலை, ராஜஸ்தான் மாநிலம் கடேபன் பகுதியில் உள்ள சம்பல் உரத் தொழிற்சாலை, உத்தர பிரதேச மாநிலம் ஜகதீஷ்பூா் பகுதியில் உள்ள இண்டோராமா இந்தியா உரத் தொழிற்சாலை ஆகிய 6 ஆலைகளின் விரிவாக்கத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து உர இறக்குமதியைக் குறைத்து, நமது நாடு உர உற்பத்தியில் தன்னிறைவு அடையே வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தாா்.