காவிரி உரிமை மீட்புக்குழு பேரணி! 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு!
கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பேரணி நடத்தப்படுவது பற்றி..

கர்நாடக அரசைக் கண்டித்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணியில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணைக் கட்டும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கர்நாடக அரசைக் கண்டித்தும், தமிழகத்துக்குரிய தண்ணீரைத் தொடர்ந்து தர மறுத்து வருவதைக் கண்டித்தும், காவிரி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்தும், குறுவை - சம்பா பாதிக்கப்பட்டுள்ள நிலையில் டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக ஏக்கருக்கு 35,000 நிவாரணம் அறிவிக்க வேண்டும்,
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தது போல அனைத்து விவசாயிகளுக்கும் பயிர்க் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளியில் பேரணி நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பதாகைகளை ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றனர்.