ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரிப்பு!
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5000 கன அடியாக அதிகரித்துள்ளதைப் பற்றி...

தமிழக காவிரி கரையோர பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து விநாடிக்கு 5000 கன அடியாக அதிகரித்துள்ளது.
தமிழக காவிரி கரையோர நீர் பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாற்றா பாளையம், கேரட்டி, கெம்பாக்கரை, ராசிமணல், மொசல்மடுவு, பிலிகுண்டுலு மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கடந்த இரண்டு நாள்காகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா நீரோடையில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தின் அளவானது புதன்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 800 கன அடியாக இருந்து வந்தது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை மற்றும் கர்நாடக மாநில அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் உள்ளிட்ட காரணங்களால் நீர் வரத்தானது இன்று (நவ. 26) காலை 7 மணி நிலவரப்படி விநாடிக்கு 4000 கன அடியாகவும், 8 மணி நிலவரப்படி விநாடிக்கு 5000 கன அடியாகவும் நீர்வரத்து அதிகரித்து தமிழ்நாடு - கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
கடந்த சில நாட்களாக நீர் வரத்து குறைந்ததால் அருவிகளில் நீர்வரத்து சரிந்த நிலையில், தற்போது திடீர் நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் விழும் நீரின் அளவு அதிகரித்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
மேலும், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
Due to continuous rainfall in the areas along the Cauvery river in Tamil Nadu, the water inflow to Hogenakkal has increased to 5,000 cubic feet per second.