நாடாளுமன்ற கூட்டத்தொடர்: நாளை (நவ. 28) திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
நாடாளுமன்ற கூட்டத்தொடர் சிறப்பு அமர்வையொட்டி திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (நவ. 28) நடைபெறும் என அறிவிப்பு...

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வு நவ. 30 ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில் திமுக எம்.பி.க்கள் கூட்டம் நாளை (நவ. 28) நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரின் சிறப்பு அமர்வு நவ. 30 ஆம் தேதி கூடுகிறது.
நவ. 30 ஆம் தேதி மக்களவையும் டிச. 2 ஆம் தேதி மாநிலங்களவையும் கூடவுள்ள நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமயில் நாளை (நவ. 28) காலை 10 மணிக்கு திமுக எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இதுபற்றி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கட்சியின் மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், 28-11-2026 சனிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், 'முரசொலி மாறன் வளாகத்தில்' உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும்.
அதுபோது, திமுக மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தொகுதி மறுவரையறை குறித்த திமுகவின் நிலைப்பாட்டில் பல்வேறு ஊகங்கள் எழுந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று மு.க. ஸ்டாலின் தெளிவுபடுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.