முகப்பு

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்த உச்சநீதிமன்றம்!

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு கலைக்கப்பட்டது குறித்து...

திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவைக் கலைத்த உச்சநீதிமன்றம்!
திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழு கலைப்பு
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் கோயில் அறங்காவலர் குழுவை உச்ச நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டது.

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல் தூணில் தீபமேற்றுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அரசு தரப்பில் நிறைவேற்றவில்லை என உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றாத அதிகாரிகள் மீது வேதனை தெரிவித்தனர். மேலும், மலை உச்சியில் உள்ள கல் தூணில் நாளை தீபமேற்றவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement

Advertisement

இதனிடையே, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் அறங்காவலர் குழுவையும் நீதிமன்றம் கலைத்து உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும் வரையில் அறங்காவலர் குழு செயல்படக் கூடாது என்று உத்தரவிட்டனர்.

கோயிலை நிர்வகிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் அடங்கிய குழு நியமிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றத்தின் உச்சிப் பிள்ளையார் கோயிலில் ஏற்றப்பட்ட தீபத்திலிருந்து தீபத்தை எடுத்துச் சென்று கல் தூணில் ஏற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், தர்காவை சுற்றி 50 மீட்டர் தொலைவில் பக்தர்கள் யார் வேண்டுமானாலும் தீபம் ஏற்றலாம்.

மலை முழுவதையும் சிஆர்பிஎஃப் கட்டுப்பாட்டில் கொண்டு வர உத்தரவிட்ட நீதிமன்றம், எந்த வகையிலும் சிக்கந்தர் தர்காவின் செயல்பாட்டில் தடங்கல் இருக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தினர். தர்காவுக்கு வழிபாடு நடத்த செல்பவர்களுக்கு பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும். தர்கா, கோயில் பகுதிகளை வேறுபடுத்தும் விதமாக வேலி அமைக்கலாம் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

The board of trustees of the Tirupparankundram temple has been dissolved

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.