சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 27) எந்தெந்த வழக்குகள் விசாரணை?
சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (நவ. 27) விசாரணைக்கு வரவுள்ள வழக்குகள் பற்றி...

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடைக் கோரிய வழக்கில் தீர்ப்பு, திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.
இன்று விசாரணைக்கு வரவுள்ள முக்கிய வழக்குகள்
* திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு
Advertisement
Advertisement
* பெரம்பூர் தொகுதியில் தனது வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி முதல்வர் விஜய் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு
* திமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் வெற்றிக்கு எதிராக மிலானி என்பவர் தொடர்ந்த தேர்தல் வழக்கில் தீர்ப்பு
* ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக வழக்குரைஞர் திரிசூலி தொடர்ந்த வழக்கு
* தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய வழக்கு
* தனியார் பள்ளிகளிடம் லஞ்சம் பெற்றதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிணை கோரி அன்பில் மகேஸ் தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.