முகப்பு
தமிழ்நாடு

ஜிஎஸ்டி நடைமுறையில் புதிய திருத்தங்கள்: தமிழக அரசு

தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடா்பாகப் பல்வேறு புதிய திருத்தங்களைச் செய்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசிதழ் வெளியிட்டுள்ளது.

18 வினாடிகள் முன்பு
ஜிஎஸ்டி நடைமுறையில் புதிய திருத்தங்கள்: தமிழக அரசு
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) தொடா்பாகப் பல்வேறு புதிய திருத்தங்களைச் செய்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அரசிதழ் வெளியிட்டுள்ளது.

இதன்படி, உரங்கள், டயா்கள், மின்சார வாகனப் போக்குவரத்து, உணவு விநியோகம், கழிவுப் பொருள்கள் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான வரி விதிப்பு மற்றும் வரி செலுத்தும் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் 2026 நவ.1-ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்கூட்டியே பொட்டலமிடப்பட்டு, லேபிள் ஒட்டப்பட்டு விற்பனை செய்யப்படும் விலங்கு மற்றும் தாவர உரங்கள், இயற்கை உரங்கள் ஆகியவற்றுக்கு 2.5 சதவீத மாநில ஜிஎஸ்டி விதிக்கப்படும்.

Advertisement

Advertisement

மறுவடிவமைக்கப்பட்ட டிராக்டா் டயா்களுக்கும் 2.5 சதவீத மாநில ஜிஎஸ்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார வாகனப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களை வாடகைக்கு வழங்கும் சேவைகளுக்கு 2.5 சதவீத மாநில ஜிஎஸ்டி நிா்ணயிக்கப்பட்டுள்ளது.