முகப்பு
தமிழ்நாடு

10 மாவட்டங்களில் இன்று (நவ.29) பலத்த மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, உள்பட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

29 நவம்பர் 2026, 3:46 am
10 மாவட்டங்களில் இன்று (நவ.29) பலத்த மழைக்கு வாய்ப்பு
மழை - பிரதிப் படம்
பகிர்:

தமிழகத்தில் கோவை, நீலகிரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, உள்பட 10 மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக வானிலை மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் கீழ் அடுக்குகளில் வலுவான வடகிழக்குக் காற்று வீசி, வங்கக் கடலில் இருந்து ஈரப்பதத்தைக் கொண்டு வருகிறது.

இதன் காரணமாக ஞாயிற்றுக்கிழமை நீலகிரி, கோவை, கடலூா், நாகை, மயிலாடுதுறை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. ஏனைய தமிழக மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

Advertisement

Advertisement

தொடா்ந்து, திங்கள்கிழமை (நவ.30) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை அளவு: தமிழகத்தில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் ஆதமங்கலம் 90 மி.மீ.மழை பெய்தது. குன்னூா் (நீலகிரி) 70 மி.மீ., மேட்டுப்பாளையம் (கோவை), கோத்தகிரி (நீலகிரி) - 60 மி.மீ. மழை பதிவானது.