திடீரென அரோகரா என தமிழில் பதிவு! இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி! பின்னணி என்ன?
திடீரென அரோகரா என தமிழில் பதிவிட்டு, இன்று படங்களை பகிர்ந்த பிரதமர் மோடியின் பதிவுக்குப் பின்னணி

தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றத்தில் இன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தனது எக்ஸ் தளத்தில் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!’ என பதிவிட்டுள்ளார்.
அதுவும், ஆங்கிலம், தமிழ், ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்று பதிவிட்டிருந்தது கவனத்தைப் பெற்றிருந்தது.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தூணில் தீபமேற்ற உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், இன்று காலை முதலே திருப்பரங்குன்றம் பகுதி மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.
Advertisement
Advertisement
ஒரு பக்கம் சிஆர்பிஎஃப் வீரர்கள் வருகை, உச்ச நீதிமன்றம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதிகள் வருகை, மிகப்பெரிய அகல்கள் மலை மீது கொண்டு செல்லப்படும் பணிகள் நடந்து வரும் நிலையில் ஏராளமான முருக பக்தர்கள் மலை மீது ஏறி வருகிறார்கள்.
நேற்று வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என பதிவிட்டிருந்த நிலையில், இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரதமர் மோடி, தான் திருப்பரங்குன்றம் வருகை தந்திருந்த போது எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.