FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு: நீதியரசர்கள் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம்!

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் முன்னிலையில் வழிகாட்டுதல் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் குறித்து...

திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்ற உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல் குழு: நீதியரசர்கள் முன்னிலையில் கலந்தாய்வுக் கூட்டம்!
உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் முன்னிலையில் வழிகாட்டுதல் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் - DNS
பகிர்:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மலை மேல் உள்ள கல் தூணில் இன்று சனிக்கிழமை கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட உள்ள நிலையில், உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதியரசர்கள் முன்னிலையில் வழிகாட்டுதல் குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்று வருகிறது.

​திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உள்ள 'தீபத்தூண்' கல் தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்றுவது தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

​திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் உச்ச நீதிமன்றத்தால் இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் மட்டுமே தீபம் ஏற்றும் பணிகளை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

​இந்த நிலையில், இந்த குழுவின் கலந்தாய்வுக் கூட்டம் நீதியரசர்கள் முன்னிலையில் நடைபெற்று வருகிறது.

தீபத்தூனில் தீபம் ஏற்றுவதற்கான நடைமுறைகள் குறித்து நீதியரசர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

​வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் விவரம்:

​1. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் பார்த்திபன்

​2. ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன்

​3. மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா

​4. மதுரை மாநகரக் காவல் ஆணையர் ராஜேந்திரன்

​5. மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.) ஐ.ஜி. திருமலா விக்ரம்,

​6. கண்காணிப்பு சிறப்பு அலுவலர் வீரராகவ்

​7. திருமங்கலம் வருவாய் கோட்டாட்சியர் கிரக்னாக் லிதியா

​8. மத்திய ரிசர்வ் காவல் படை (சி.ஆர்.பி.எஃப்.) ஐ.ஜி. முகேஷ் குமார்

​9. மதுரை மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்

10. ​கோயில் ஸ்தானிக பட்டர்கள் சாமிநாதன், ரமேஷ், அஜித்

​இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மற்றும் திருக்கோயில் ஸ்தானிகர்கள் அடங்கிய இந்த குழுவினர், கலந்தாய்வுக் கூட்டத்திற்குப் பிறகு தீபம் ஏற்றுவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளனர்.

நீதியரசர்கள் பாதுகாப்புப் படையினருடன் தீபத்தூண் பகுதிக்குச் சென்று தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிட உள்ளனர்.

Supreme Court-appointed committee on lighting lamps on the pillars at Tirupparankundram: Consultative meeting held in the presence of the judges!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.