FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மாநில உரிமைகளை எரித்துச் சாம்பலாக்கிய தவெக அரசு: கனிமொழி கண்டனம்!

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்பி தெரிவித்த கருத்து தொடர்பாக...

50 வினாடிகள் முன்பு
மாநில உரிமைகளை எரித்துச் சாம்பலாக்கிய தவெக அரசு: கனிமொழி கண்டனம்!
கனிமொழி எம்.பி. - கோப்புப் படம்
பகிர்:

திருப்பரங்குன்றம் தீப விவகாரம் தொடர்பாக கனிமொழி எம்பி தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.

திருப்பரங்குன்றத்தில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில், தீபம் ஏற்ற அனுமதித்து சில நாள்களுக்கு முன் இடைக்கால தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியிருந்தது.

ஆனால், உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி அங்கு கார்த்திகை நாளன்று தீபம் ஏற்றப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு போராட்டம் நடைபெற்றது. போரட்டத்தில் ஈடுபட்ட ஹிந்து அமைப்பினர் பலரும் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

Advertisement

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் இன்று தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டதுடன், திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரவும் உத்தரவிட்டனர்.

மேலும், திருக்கோயில் அறங்காவலர் குழுவின் செயல்பாடுகளை இடைநிறுத்தி, கோயில் நிர்வாகத்தை மேற்பார்வையிட ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் வி. பார்த்திபன் ஆகியோரை நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமித்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, தீபம் ஏற்றுவதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும் ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமையில் 13 பேர் கொண்ட வழிகாட்டுதல் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.

இதில் ஓய்வுபெற்ற நீதிபதிகள், மதுரை மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், மத்திய ரிசர்வ் காவல் படை உயர் அதிகாரிகள், வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் கோயில் ஸ்தானிக பட்டர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து, இன்று மாலை 5 மணியளவில் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றப்பட்டது.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள திமுக எம்பி கனிமொழி, “பேரறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் திராவிட இயக்கம் தொடர்ந்து காத்து வந்த மாநில உரிமைகளை, இன்று எரித்துச் சாம்பலாக்கி இருக்கிறது தவெக அரசு” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

summary

TVK government has reduced state rights to ashes: Kanimozhi condemns!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.