திமுகவுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் கருத்து!
மு.க.ஸ்டாலினை சோனியா காந்தி உள்ளிட்டோா் சந்தித்த நிலையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொகுதி மறுசீரமைப்பு மசோதா குறித்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை சோனியா காந்தி உள்ளிட்டோா் சந்தித்த நிலையில், அந்தக் கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் திமுகவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மூத்த தலைவா் ப.சிதம்பரம்: இதுகுறித்து அவா் அளித்த பேட்டியில், ‘திமுகவுக்கு மக்களவையில் 22 இடங்களும், மாநிலங்களவையிலும் குறிப்பிடத்தக்க இடங்கள் உள்ளன. திமுகவை நம் பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் தலைமைக்கு முன்பே சுட்டிக் காட்டினேன்.
தவெக ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது சரியான முடிவுதான். ஆனால், அதற்குப் பிறகு, நடைபெற்ற சில நிகழ்வுகளால் திமுகவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுவிட்டது. சில விஷயத்தை கட்சிக்குள் மட்டுமே பேசமுடியும். வெளியில் கூற முடியாது என்று தெரிவித்துள்ளாா்.
Advertisement
Advertisement
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் செல்வப்பெருந்தகை: இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில், ‘அற்ற குளத்து அறுநீா்ப் பறவைகளே! நாம் விட்டுச் சென்றது பாலைவனம் அல்ல; சோலைவனம்’ என்று திமுகவுக்கு ஆதரவாக பதிவை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.