முகப்பு

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம்: திருமாவளவன்

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மக்களவையில் நாளை வாக்களிக்க உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க உள்ளோம்: திருமாவளவன்
திருமாவளவன் - கோப்புப் படம்
பகிர்:

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக மக்களவையில் நாளை வாக்களிக்க உள்ளதாக விசிக தலைவர் திருமாவளவன் எம்பி பேசியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா மக்களவையில் நாளை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. மசோதாவுக்கு எதிராக விசிக எம்.பி.க்கள் இருவரும் வாக்களிக்க இருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “இந்திய அரசியல் வரலாற்றில் இன்றைய நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருக்கிறது.

Advertisement

Advertisement

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும், இந்தியா கூட்டணியைச் சார்ந்த தலைவர்களும், தென்னிந்தியாவைச் சார்ந்த காங்கிரஸின் மூன்று முதல்வர்களும் தமிழ்நாட்டுக்கு வருகை தந்து, திமுக தலைவர் ஸ்டாலினைச் சந்தித்து உரையாடிய நிகழ்வு என்றென்றும் வரலாற்றில் பேசப்படும் ஒரு நிகழ்வாக அமைந்திருக்கிறது.

பாஜக டீலிமிட்டேஷன் என்னும் பெயரில் கொண்டு வரவிருக்கிற நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறைக்கான சட்ட மசோதாவை ஆதரிப்பது, அவர்களின் இந்துத்துவா செயல்திட்டத்திற்கு வலுசேர்ப்பதாக அமைந்துவிடும் என்கிற கவலையை காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகளைச் சார்ந்த தலைவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி என்கிற முறையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சார்ந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சட்ட மசோதாவை எதிர்த்து வாக்களிக்க இருக்கிறோம். அந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி எடுக்கிற முயற்சிக்கு ஒத்துழைக்க இருக்கிறோம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

summary

We will vote against the constituency delimitation bill: Thirumavalavan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.