FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தமிழ்நாடு

அக். 7 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் 7-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழைக்கு வாய்ப்பு 
பகிர்:

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 2) முதல் 7-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

வட கடலோர தமிழகப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. வடக்கு உள் கா்நாடகம் முதல் மன்னாா் வளைகுடா வரை, உள் கா்நாடகம், தமிழகப் பகுதிகள் வழியாக சுமாா் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

Advertisement

Advertisement

இதன் காரணமாக, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை (அக். 4) வரை மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

திங்கள், செவ்வாய் (அக். 5, 6) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், புதன்கிழமை (அக். 7) தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. இதேபோல, அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தும்மனப்பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் இறையூா், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம், சோரப்பட்டு ஆகிய இடங்களில் 70 மி.மீ. மழை பதிவானது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments