FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும்; புதிய தேர்வையும் அறிவிக்க வேண்டும்: அன்புமணி வலியுறுத்தல்

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட வேண்டும் அன்புமணி வலியுறுத்தியிருப்பது குறித்து...

பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ். - கோப்புப்படம்
பகிர்:

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிடுவதோடு, புதிய தேர்வையும் அறிவிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் கடந்த ஜூலை 4 மற்றும் 5-ஆம் தேதிகளில் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை சென்னை உயர்நீதிமன்றம் விலக்கிக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் அந்தத் தேர்வை எழுதிய, பணியிலுள்ள ஆசிரியர்கள் 2 லட்சத்து 20,464 பேரின் மன உளைச்சல் முடிவுக்கு கொண்டு வரப்படும்.

Advertisement

Advertisement

உயர்நீதிமன்றத் தடையின் காரணமாகவே முடிவுகளை வெளியிட முடியவில்லை என்று கூறி வந்த தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், இப்போது தடை நீக்கப்பட்டு விட்ட நிலையில் உடனடியாக தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும். உச்சநீதிமன்றத் தீர்ப்பின் காரணமாக 3.28 லட்சம் ஆசிரியர்களின் பணிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருப்பதால், அவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்ச்சி மதிப்பெண்களை 150-க்கு 52 (35%) ஆக தமிழக அரசு குறைக்க வேண்டும்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2010-ஆம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் அனைவரும் 2028-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் தகுதித் தேர்வை எழுதி முடிக்க வேண்டும். ஆனால், இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுதவில்லை. அவர்களும், விரைவில் முடிவு அறிவிக்கப்படவுள்ள தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் எழுதும் வகையில் புதிய ஆசிரியர் தகுதித் தேர்வை உடனடியாக அறிவிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

The Teachers Recruitment Board should immediately announce a new Teacher Eligibility Test so that these teachers....

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments