வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள்: அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம்!
வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக...
வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் இடம்பெற்ற விவகாரத்தில், நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில், ஊரின் பெயர்கள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி ஆகிய 3 மொழிகளில் இருந்தது சர்ச்சையானது.
இதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஹிந்தி மொழியில் இடம்பெற்றிருந்த ஊர்ப் பெயர்கள் அழிக்கப்பட்டது. மேலும், இது தொடர்புடைய அரசு அதிகாரிகள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழ்க அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் - நாசரேத் மாநில நெடுஞ்சாலையில் (SH-93) புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழியிலும் ஊர்ப் பெயர்கள் எழுதப்பட்டிருந்தது தெரியவந்தவுடன் ஹிந்தி எழுத்துக்கள் உடனடியாக நீக்கப்பட்டன.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராக மாநில நெடுஞ்சாலைத் துறையின் வழிகாட்டிப் பலகையில் ஹிந்தி இடம்பெறக் காரணமாய் இருந்த நெடுஞ்சாலைத்துறை உதவிக் கோட்டப் பொறியாளர் மற்றும் உதவிப் பொறியாளர் ஆகியோர் உடனடியாகத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசின் இருமொழிக் கொள்கைக்கு எதிராகச் செயல்படும் அரசு அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
The Assistant Divisional Engineer and the Assistant Engineer of the Highways Department have been placed under suspension in connection with the inclusion of town names in Hindi on a signage board.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.