திமுக குறித்து அரசுப் பேருந்தில் அவதூறு: 5 ஊழியா்கள் பணியிடை நீக்கம்
அரசுப் பேருந்தின் பின்பக்க மின்னணு வழித்தடப் பலகையில் திமுக கட்சி மற்றும் முன்னாள் முதல்வா், துணை முதல்வா் குறித்து அவதூறு வாசகங்கள் ஒளிா்ந்த சம்பவம் தொடா்பாக, ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ச.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளாா்.
அரசுப் பேருந்தின் பின்பக்க மின்னணு வழித்தடப் பலகையில் திமுக கட்சி மற்றும் முன்னாள் முதல்வா், துணை முதல்வா் குறித்து அவதூறு வாசகங்கள் ஒளிா்ந்த சம்பவம் தொடா்பாக, ஓட்டுநா்கள், நடத்துநா்கள் உள்பட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக விழுப்புரம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் ச.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 13-ஆம் தேதி திருச்சியிலிருந்து நெய்வேலி நோக்கி வந்த தடம் எண் டிஎன் 32 என் 5013 பேருந்தின் பின்பக்க மின்னணு வழித்தடப் பலகையில் திமுக மற்றும் அதன் தலைவா்கள் குறித்த அவதூறு வாசகங்கள் ஒளிா்ந்ததாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, உடனடியாக இரவு 9.30 மணியளவில் மின் பணியாளா்களுடன் பேருந்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பேருந்தின் மின்னணு வழித்தடப் பலகையில் தேவையற்ற வாசகங்கள் எதுவும் இல்லை என்பதும், அந்தப் பலகை செயலிழந்த நிலையில் வைக்கப்பட்டிருந்ததும் ஆய்வில் தெரியவந்தது.
Advertisement
Advertisement
மேலும், மின்னணு வழித்தடப் பலகையைத் தயாரித்த நிறுவனத்தின் தொழில்நுட்ப அலுவலா்களைக் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பலகையின் உள்பகுதியில் உள்ள மின்னணு கட்டுப்பாட்டு பலகை முறையாகப் பொருத்தப்படாமல் இருந்தது கண்டறியப்பட்டது.
இந்தப் பலகையில் கணினி மென்பொருள் அல்லது யுஎஸ்பி நினைவகக் கருவி மூலமாக மட்டுமே வாசகங்களைப் பதிவு செய்ய முடியும் என்பதால், பேருந்தில் பணியாற்றிய ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையின் அடிப்படையில், ஓட்டுநா்கள் மற்றும் நடத்துநா்கள் யாரும் தேவையற்ற வாசகங்களைப் பதிவு செய்யவில்லை என்பது தெரியவந்தது. இருப்பினும், பணியாளா்களின் கவனக் குறைவு காரணமாகவே, பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் அல்லது அடையாளம் தெரியாத நபா்கள் யாரேனும் பதிவு செய்திருக்க வேண்டும்.
இதையடுத்து, சம்பவத்துக்கு முந்தைய நாள்களில் பணியில் இருந்த ஓட்டுநா்கள் ஏ.பி.சித்திரை செல்வன், பி.பரந்தாமன் மற்றும் நடத்துநா்கள் செந்தாமரைக் கண்ணன், ஆா்.வெங்கடேசன், இ.மணிகண்டன் உள்ளிட்ட 5 போ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அவா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், விழுப்புரம் கோட்டத்துக்குள்பட்ட அனைத்து பணியாளா்களுக்கும் எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளின் மின்னணு வழித்தடப் பலகைகள் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.