FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உருவ கேலி! மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் பதிலடி கொடுப்பர்- முதல்வர் விஜய் கண்டனம்

உருவ கேலி செய்து பேசிய மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்த மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்
பகிர்:

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவ வேலி செய்து பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு தாராபுரம் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்று முதல்வர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தாராபுரம் தவெக வேட்பாளர் சத்யபாமா குறித்து உருவ கேலி செய்யும் வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து தமிழக முதல்வர் விஜய் வெளியிட்டிருக்கும் கண்டன அறிக்கையில், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின்.

Advertisement

Advertisement

நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.

தி.மு.க. சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

ஜனநாயகத்திற்கு விரோதமானவர்கள் தி.மு.க.வினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் தி.மு.க.வின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.

பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்திற்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.

தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி தி.மு.க.விற்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments