ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே மு.க. ஸ்டாலின்தான்: விஜய் கண்டனம்
தவெக வேட்பாளரை உருவ கேலி செய்ததாக மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்தது குறித்து...
தவெக பெண் வேட்பாளரை உருவ கேலி செய்ததாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் விஜய்யின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான திமுக சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் மு.க.ஸ்டாலின்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சத்தியபாமா குறித்து, உருவ கேலி செய்து, மிகவும் அநாகரிகமாகப் பேசிப் புளகாங்கிதம் அடைந்துள்ளார்.
Advertisement
Advertisement
திமுக சார்பாக வளர்க்கப்பட்டு வரும் ஆபாசநதியை, வன்மநதியை, வக்கிரநதியை உருவாக்கியதே முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய தான்தான் என்பதைப் பெருமையுடன் மார்தட்டி மகிழ்வுடன் ஒப்புக்கொண்டிருக்கிறார். ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
ஜனநாயகத்துக்கு விரோதமானவர்கள் திமுகவினர். ஆபாசமும் வன்மமும் வக்கிரமும் திமுகவின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருப்பதைத் தமிழக மக்கள் அனைவரும் காலகாலமாக உணர்ந்தே வைத்திருக்கின்றனர்.
பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதில், அதிலும் பெண்களை அருகில் வைத்துக்கொண்டே, அவர்கள் அருவருப்பாக உணர்வதைக்கூட கண்டுகொள்ளாமல் பேசுவதில் வல்லவர்களான இந்தத் தீய சக்திக் கூட்டத்துக்குத் தமிழக மக்களும் தாராபுரம் தொகுதி மக்களும் தக்க பதிலடியைக் கொடுக்கத்தான் போகின்றனர்.
தொடர்ந்து பெண்களை ஆபாசமாகப் பேசி வரும் தீய சக்தி திமுகவுக்குத் தமிழகப் பெண்களின் மகனாக, அண்ணனாக, தம்பியாக எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.
CM Vijay condemns M.K. Stalin for body-shaming a female TVK candidate
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.