FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இறுதிக்கட்ட பிரசாரம்: தாராபுரத்தில் நாளை 114 கி.மீ. சாலைவலம் செல்கிறார் முதல்வர் விஜய்

தாராபுரத்தில் நாளை (அக். 4) நடைபெறவுள்ள முதல்வர் விஜய்யின் சாலைவலம் குறித்து...

முதல்வர் விஜய் சாலைவலம் - கோப்புப் படம்
பகிர்:

மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அக். 6-ல் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் வெள்ளிக்கிழமையில் (அக். 2) வாக்கு சேகரித்த நிலையில், மதுராந்தகத்தில் இன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாக்கு சேகரிக்கவுள்ளனர்.

அதேபோல், தாராபுரத்தில் மு.க. ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் வெள்ளிக்கிழமையில் பிரசாரத்தில் ஈடுபட்ட நிலையில், முதல்வர் விஜய் நாளை (அக். 4) தாராபுரம் செல்கிறார்.

Advertisement

Advertisement

தாராபுரத்தில் ஏற்கெனவே தவெக தலைவரும் முதல்வருமான விஜய் தலைமையில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்ட நிலையில், நாளை சாலைவலம் செல்கிறார் விஜய்.

ஞாயிற்றுக்கிழமையில் (அக். 4) கோவை விமான நிலையம் செல்லும் முதல்வர் விஜய், அங்கிருந்து சிட்ரா, காமராஜபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதுார் வழியாக பைபாஸ் சாலையை அடைந்து தாராபுரம் செல்கிறார். சுமார் 114 கி.மீ. பயணித்து 23 இடங்களில் வாக்கு சேகரிக்கவுள்ளார் முதல்வர் விஜய்.

முதல்வர் செல்லவிருக்கும் இந்த வழித்தடம் குறுகலாக இருப்பதாலும், நாளை விடுமுறை நாள் என்பதாலும் அதிகளவில் கூட்டம் கூடுவதற்கு வாய்ப்புகள் இருப்பதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

மேலும், முதல்வர் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக கோவையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள சிவப்பு மண்டலப் பகுதிகளுடன் கொடிசியா பகுதி, பீளமேடு, சிட்ரா, நேரு நகா், ஹோப் காலேஜ், எஸ்.ஐ.ஹெச்.எஸ். காலனி, ஒண்டிப்புதூா், சிங்காநல்லூா், இருகூா், சின்னியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளும் தற்காலிக சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதேபோல, கோவை மாவட்ட காவல் எல்லைக்கு உள்பட்ட கரியாம்பாளையம் சந்திப்பு, நீலாம்பூா் புறக்காவல் நிலையம், சிந்தாமணிப்புதூா் சந்திப்பு, சூலூா் பேருந்து நிலையம், காங்கேயம்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி ஊா்திகளை பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை அக்டோபா் 3-ஆம் தேதி அதிகாலை 1 மணி முதல் 5-ஆம் தேதி காலை 9 மணி வரை அமலில் இருக்கும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமின்றி, தாராபுரத்தில் முதல்வரின் சாலைவலத்துக்காக சுமார் 2,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், முதல்வரின் வருகையால் புறநகர்ப் பகுதிகள், பிரதான சாலைகள், குடியிருப்புப் பகுதிகளில் உள்ள சாலைகளின் இருபுறமும் தடுப்புகள் அமைக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

summary

CM Vijay to hold a roadshow in Dharapuram tomorrow (Oct 4)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments