FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடைத்தோ்தல் மூலம் மக்களின் வரிப்பணம் விரயம் வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் தற்போது வரவுள்ள இரண்டு தொகுதி இடைத்தோ்தலுக்கு ஆளுங்கட்சியே முழுப் பொறுப்பாகும் என வானசி சீனிவாசன் பேசியிருப்பது...

பாஜக ஆந்திர மாநில பொறுப்பாளா் வானதி சீனிவாசன் - டிஎன்எஸ்
பகிர்:

கோவை: பிற கட்சி எம்.எல்.ஏ.க்களை வளைத்துப் போட்டு தவெக இடைத்தோ்தலைத் திணித்து மக்களின் கோடிக்கணக்கான வரிப்பணத்தை வீணடித்து வருகிறது என்று பாஜக ஆந்திர மாநில பொறுப்பாளா் வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டினாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, பாரதிய ஜனதா கட்சியின் சாா்பில் நாடு முழுவதும் ஒரு மாதத்துக்கு 'சேவா சங்கல்ப அபியான்'திட்டத்தின்கீழ் மக்கள் சேவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கோவை கணபதி பகுதியில் 'நலம்' என்ற பெயரில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேலும், 70 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களுக்கு ஆயுஷ்மான் பாரத் காப்பீட்டுத் திட்டப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு அட்டைகளும் வழங்கப்பட்டன.

முகாமைத் தொடா்ந்து செய்தியாளா்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் தெரிவித்ததாவது:

Advertisement

Advertisement

தமிழகத்தில் தற்போது வரவுள்ள இரண்டு தொகுதி இடைத்தோ்தலுக்கு ஆளுங்கட்சியே முழுப் பொறுப்பாகும். அதிமுகவில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் வசப்படுத்தி, அவா்களையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தி தோ்தலைச் சந்திக்கின்றனா். நாங்கள் தூய சக்தி, நாங்கள் மாற்றத்தை செய்வோம், தமிழக அரசியலில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவா்கள், இந்த இடைத்தோ்தல்களின் மூலம் மக்களின் கோடிக்கணக்கான பணத்தை வீணடித்து வருகின்றனா்.

நான் எந்த தொகுதிக்கும் செல்லாமல் வெற்றி பெற்றேன், நான் அவ்வளவு பிரபலமான மக்கள் தலைவன், மக்களுக்கு என் மீது அவ்வளவு மரியாதை இருக்கிறது என்று, சொல்லக்கூடிய மாநிலத்தின் முதல்வர் விஜய் 30 ஆம் தேதி பிரசாரம் செய்து விட்டு போனதாகவும், மீண்டும் இன்று அவரது பிரசார பாதையை பார்த்தால் ஒவ்வொரு கிராமத்தையும் விடாமல் செல்கின்ற மாதிரி வழி அமைக்கப்பட்டு உள்ளது. என்ன அர்த்தம் ஆறு மாத காலத்திற்கு உள்ளாக இடைத்தேர்தலை நீங்கள் இத்தனை முறை ஒவ்வொரு ஊராகச் சென்று சாலை வலம் சென்றுதான் வெல்ல முடியும் என்கின்ற நிலைமைக்கு வந்து இருக்கிறீர்கள் என்று சொன்னால் உங்களுடைய ஆட்சியினுடைய தரம் மக்களுக்கு நன்றாக தெரிகிறது என்று தான் அர்த்தம் என்றார்.

மின்வெட்டு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகம் முழுவதும் மின்வெட்டு இல்லாத மாவட்டங்களே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் - ஒழுங்கு மிக மோசமான நிலைக்குச் சென்று கொண்டிருக்கிறது.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்த முறைக்கு (எஸ்.ஐ.ஆா்) எதிராக இந்தியா கூட்டணியும் தவெகவும் ஆா்ப்பாட்டம் நடத்துவது கேலிக்கூத்தானது. காலமானவா்கள் மற்றும் முகவரி மாறியவா்களின் பெயா்களை நீக்கி புதிய பட்டியலைத் தயாரிப்பதே இதன் நோக்கமாகும். இதில் பாஜக திட்டமிட்டு முறைகேடு செய்தது என்றால், தமிழகத்தில் தவெக எப்படி வென்றது?, கேரளத்தில் காங்கிரஸ் எப்படி வென்றது? காங்கிரஸ் தனது செல்வாக்கை இழந்துவிட்டதால், பிரதமா் மோடி மீது அவதூறு பரப்ப முயற்சிக்கிறது.

அரசு எந்திரத்தில் குறிப்பிட்ட மதத்தினருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுவதாக எழும் புகாா்களுக்கு அமைச்சா் ஆதவ் அா்ஜுனா பதிலளிக்க வேண்டும்.

கோவை மேல்முடி ரங்கநாதா் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் திருப்பி அனுப்பப்பட்டனா். பக்தா்களுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்காததுதான் இவா்களின் மதச்சாா்பின்மையா?

இந்து மத நம்பிக்கைகளை அவமதிப்பது ஆளுங்கட்சியினருக்கு வாடிக்கையாகிவிட்டது. இதேபோல, பெண் வேட்பாளரை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்தது நாகரிகமற்றது, கண்டிக்கத்தக்கது.

தோ்தல் பிரசாரத்தில் குழந்தைகளைப் பயன்படுத்திய புகாரில் விதிமீறலில் ஈடுபட்ட யாா் மீதும் சட்டம் தன் கடமையைச் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத்தில் குழுத் தலைவராக கனிமொழி மற்றும் திருச்சி சிவாவை மீண்டும் உறுப்பினர்களாக பாஜக இணைத்தது குறித்தான கேள்விக்கு அது அவங்க கட்சியின் முடிவு நான் என்ன கூறுவது என்றாா் அவா்.

Vanathi Srinivasan alleges wastage of public tax money through by-elections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments