புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்! 9 மணி வரை 19.20% வாக்குகள் பதிவு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெறுவது பற்றி...
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தட்டஞ்சாவடி தொகுதிக்கான இடைத்தேர்தல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆண் வாக்காளர்கள் 12,575, பெண் வாக்காளர்கள் 14,341, மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் என மொத்தம் 26,921 பேர் வாக்களிக்கின்றனர்.
வாக்குப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையான தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். வாக்குச்சாவடி சுற்றி துணை ராணுவப்படை மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
வாக்களித்துவிட்டு வந்த முதல் முறை வாக்காளர் ஆன சின்மயி கூறுகையில், கடந்த தேர்தலில் எனக்கு ஓட்டுரிமை இல்லாத என்னால் வாக்களிக்க முடியவில்லை என்றும், தற்போது 18 வயது நிரம்பியதால் இந்த இடைத்தேர்தலில் எனது வாக்கை பதிவு செய்துள்ளதாகவும், அனைவரும் கட்டாயம் தங்கள் வாக்கை பதிவு செய்ய வேண்டும் என கூறினார்.
வாக்குப்பதிவு மையத்திற்கு ஆய்வு செய்ய வந்த முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் கூறுகையில், காலை முதல் அமைதியான முறையில் வாக்கு பதிவு நடைபெற்று வருவதாகவும், அனைத்து வாக்குச்சாவடிகளும் சேர்த்து சுமார் 300 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான இரண்டு வாக்குச்சாவடிகளிலும் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் வாக்கு பதிவு நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
காலை 9 மணி நிலவரப்படி தட்டாஞ்சாவடி தொகுதியில் 19.20% வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
Puducherry Thattanchavady by-election: 19.20 percent voter turnout recorded by 9 AM
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.