FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: 3 மணி நிலவரப்படி 68% வாக்குப்பதிவு!

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி வரை பதிவான வாக்குகள் குறித்து....

வரிசையில் காத்திருந்து வாக்களிக்கும் மக்காள் - DNS
பகிர்:

புதுவையின் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.91% வாக்குகள் பதிவாகியுள்ளது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஆளும் என்.ஆர். காங்கிரஸ், திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

Advertisement

Advertisement

வாக்குப்பதிவு தொடங்கியதும் பொதுமக்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையான தங்களது வாக்கை செலுத்தி வருகின்றனர். வாக்குச்சாவடி சுற்றி துணை ராணுவப்படை மற்றும் உள்ளூர் போலீசார் தீவிர பாதுகாப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனிடையே பிற்பகல் 3 மணி நிலவரப்படி 68.91% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments