இடைத்தேர்தல்: தட்டாஞ்சாவடியில் 80.81% வாக்குகள் பதிவு
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதியில் பதிவான வாக்குகள் குறித்து...
புதுச்சேரியில் இடைத்தேர்தல் நடைபெற்ற தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதியில் 80.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் என். ரங்கசாமி, இரு தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் தட்டாஞ்சாவடி தொகுதியில் ராஜிநாமா செய்தார்.
இதனைத் தொடர்ந்து, தட்டாஞ்சாவடி தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, இன்று (அக். 6) காலை தொடங்கிய வாக்குப்பதிவு, மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது.
Advertisement
Advertisement
வாக்குப் பதிவின் முடிவில் 80.81 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், 2026 சட்டப்பேரவைத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் தட்டாஞ்சாவடியில் 6.29 சதவிகித அளவுக்கு வாக்குப்பதிவு குறைந்துள்ளது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு, புதுவை நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தவிர, தமிழகத்தில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவை தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தின் நந்திகிராம் மற்றும் ரெஜிநகர், அஸ்ஸாம் மாநிலத்தின் நாகோன் மக்களவைத் தொகுதியிலும் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (அக். 6) நடைபெற்றது.
தமிழகத்தின் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, இடதுசாரிகள், நாதக என ஐந்து முனைப் போட்டி நிலவும் நிலையில், இவ்விரு தொகுதிகளிலும் வெள்ளிக்கிழமையில் (அக். 9) வாக்கு எண்ணிக்கை அதே நாளில் முடிவும் அறிவிக்கப்படும்.
By-election: 80.81% voter turnout in Thattanchavady
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.