FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

அரசியலில் களத்தில் தனுஷ்... தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பெயர் பதிவு! விரைவில் அறிவிப்பு!

நடிகர் தனுஷ் தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளதைப் பற்றி...

பகிர்:

நடிகர் தனுஷ் தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துவிட்டதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமான விஜய், சினிமா வாழ்க்கை விட்டுவிட்டு கடந்த 2024 ஆம் ஆண்டு ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல், மக்களவைத் தேர்தலைப் புறக்கணித்த தவெக, நேரடியாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கி 108 இடங்களில் மிகப்பெரிய வெற்றி பெற்றது. முதல் தேர்தலிலேயே முதல்வரான பெருமையையும் விஜய் பெற்றார்.

விஜய்யின் மிகப் பெரிய வெற்றி, மற்ற சினிமா நட்சத்திரங்களையும் அரசியல் பக்கம் இழுக்க ஆரம்பித்திருக்கிறது. முன்னணி நட்சத்திரங்களில் விஜய் சினிமாவிலிருந்து விலகிவிட்ட நிலையில், அஜித்துடம் கார் பந்தயமென்று ஒதுங்கிவிட்டார்.

Advertisement

Advertisement

இதனால், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் முன்னணி நட்சத்திரங்களாக முன்னேறியிருக்கும் சூழலில் இவர்களும் அரசியலுக்கு வரப்போவதாக அவ்வப்போது பேச்சுகள் வெளிவருகின்றன.

அதிலும் குறிப்பாக தனுஷ் மீது அனைவரது கவனமும் இருந்து வந்தது. காரணம், முன்னணி நடிகராக திரைப்பயணத்தில் வேகம் காட்டி வரும் அவர், மறுபுறம் தனது ரசிகர் நற்பணி மன்றத்தையும் ஒரு சேர வலுப்படுத்தி வருகிறார்.

சமீபத்தில் தனது ரசிகர் மன்றத்தை மாவட்ட ரீதியாக பிரித்து மாவட்ட தலைவர்களை தனுஷ் நியமித்திருந்தார். தொகுதி வாரியாகவும் மன்றத்துக்கு உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், நடிகர் தனுஷ் தலைமைத் தேர்தல் ஆணைத்தில் தன்னுடைய கட்சியின் பெயரைப் பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி தனது கட்சிக்கு 'தமிழக எழுச்சிக் கழகம்' என்று தனுஷ் பெயர் சூட்டியுள்ளாராம்.

சட்​டப்​பேரவை தேர்​தல் வெற்​றிக்கு பிறகு முதல்​வர் விஜய்​யை நடிகரும் எம்பியுமான கமல்​ஹாசன், சிவ​கார்த்​தி​கேயன், சிலம்பரசன் உள்ளிட்ட பல்​வேறு சினிமா பிரபலங்​கள் சந்​தித்து வாழ்த்து தெரிவித்​தனர். ஆனால், ரஜினியோ, தனுஷோ முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை; வாழ்த்தும் தெரிவிக்கவில்லை.

அதே நேரத்தில், முதல்வர் விஜய்யின் வருகை தனுஷின் சினிமா வாழ்க்கையில் பல்வேறு பின்னடைவுகளையும் ஏற்படுத்தியது. ‘இட்லி கடை’ பட வெளியீட்டின் போது கரூர் நெரிசல் சம்பவம் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் இருந்த இழுபறியால் ‘கர’ படத்தின் வசூல் பெரியளவில் பாதிக்கப்பட்டது.

இதனால், முதல்வர் விஜய்க்கு எதிரான தனுஷின் நிலைப்பாடுகள் மற்றும் அரசியல் போக்கு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகின. விரைவில் பொதுவெளியில் தனது அரசியல் நிலைப்பாட்டை தனுஷ் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கட்சியின் கொடி, கொள்கைகள், கோட்பாடுகள் உள்ளிட்டவைகளும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியலிலிருந்து பின்வாங்கிய உச்ச நட்சத்திரம் ரஜினியின் ஆதரவுடன் தனுஷ் நேரடி​யாக 2031 சட்​டப்​பேரவை தேர்​தலில் போட்​டி​யிட முடிவு செய்​துள்​ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

summary

It is reported that actor Dhanush has registered his party's name with the Election Commission, and an announcement regarding this is expected soon.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments