தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!
தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் பரிசுத்தொகை வழங்குவது குறித்து...
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு முதல்வர் விஜய் பரிசுத்தொகை வழங்கி வருகிறார்.
நிகழ்ச்சியில் தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகைக்கான காசோலையை முதல்வர் விஜய் வழங்கினார்.
கோவையைச் சோ்ந்த தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜ், ஜப்பானில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தின் இறுதிச்சுற்றில் இறுதி நேரத்தில் அபாரமாக ஓடி தங்கம் வெல்லும் இந்தியாவின் கனவை நனவாக்கினாா்.
Advertisement
Advertisement
தொடா்ந்து, கலப்பு 400 மீட்டா் தொடா் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றாா். மேலும், 400 மீட்டா் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து பி.டி. உஷாவின் 42 ஆண்டு கால சாதனையை முறியடித்து வெண்கலப் பதக்கம் வென்றாா்.
தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதுடன், இரவு விருந்தும் அளிக்கப்படவுள்ளது.
CM Vijay presented an incentive of Rs 1.55 crore to Athlete Vidya Ramraj
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.