இரண்டாமிடத்துக்கு போட்டி போடும் திமுக - அதிமுக: அமைச்சர் பிரபு
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் திமுக - அதிமுக இடையே போட்டி நிலவுவதாக அமைச்சர் பிரபு கூறியது குறித்து...
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் இரண்டாமிடம் பிடிப்பதற்காக திமுக - அதிமுக இடையே போட்டி நிலவுவதாக அமைச்சர் பிரபு பேசியுள்ளார்.
ராமநாதபுரத்தில் செய்தியாளர்களுடன் அமைச்சர் பிரபு பேசியதாவது, "மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தவெக வெற்றிபெற உள்ளது.
இந்தத் தேர்தலில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும்தான் போட்டி, இரண்டாமிடத்துக்காக. முதல்வர் விஜய் மீது மக்கள் வைத்துள்ள அளவுகடந்த அன்புதான், வாக்குகளாக மாறிக் கொண்டிருக்கிறது.
Advertisement
Advertisement
இன்னும் சிறிதுநேரத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை தவெக பெறவிருக்கிறது" என்று தெரிவித்தார்.
இடைத்தேர்தல் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக வேட்பாளர்கள் மரகதம் குமரவேலும் சத்தியபாமாவும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகின்றனர்.
DMK and AIADMK vie for second place in Maduranthakam and Dharapuram constituencies, says Minister Prabu
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.